ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருப்பதாக எழுந்த புகாரின் காரணமாக ஆந்திர மாநில அரசு திருமலையில் திருப்பதி சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.
விசாரணை குழுவினர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் நாள், கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த கொள்முதல் துறை பொது மேலாளர் முரளி கிருஷ்ணா அளித்த புகாரில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்தும், முதல் கட்டத் தகவல் மற்றும் விவரத்தை அறியுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
நேற்று, செயல் அலுவலர் சியாமளா ராஜிடம், டெண்டர் எப்படி வழங்கப்பட்டது என்ற விவரம் கேட்கப்பட்டது. மேலும் கலப்பட விவகாரம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? வழக்கமாக மைசூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பலாம் என்ற நிலையில் முதல் முறையாக குஜராத்தில் உள்ள ஆய்வகத்துக்கு ஏன் அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை கேட்டனர்.
மூன்றாவது நாளாக இன்றும் திருப்பதியில் உள்ள கொள்முதல் பிரிவு அலுவலக கிளை திருமலையில் உள்ள நெய் கிடங்கில் ஆய்வு நடத்துகிறது. இந்நிலையில், ஏ.ஆர்.டெய்ரிக்கு செல்லவும், அங்குள்ள ஆய்வகங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பது குறித்தும் ஒரு குழு தயாராகி வருகிறது.
அங்கிருந்து எப்போது நெய் அனுப்பப்பட்டது என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.