தெலுங்கானா: ஒரே மாநிலம், ஒரே போலீஸ் படை என கோரி கான்ஸ்டபிள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா போலீசார் ஏற்கனவே 15 நாட்கள் தொடர் பணி மற்றும் 4 நாட்கள் விடுமுறை அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு 26 நாட்கள் தொடர் பணி மற்றும் 4 நாட்கள் விடுமுறை என மாற்றியதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறப்பு காவலர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபட தூண்டியதாக 10 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தெலங்கானா மாநில காவல்துறையில் 33 காவலர்களை சஸ்பெண்ட் செய்தும் டிஜிபி உத்தரவிட்டார்.
தெலுங்கானாவில் கான்ஸ்டபிள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சம்பவம் காவல் துறையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், பல்வேறு இடங்களில் காவல்துறையினரின் போராட்டம் தொடர்கிறது.
வாரங்கல், கொத்தகுடம் உள்ளிட்ட இடங்களிலும் காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.