மும்பை: மகாராஷ்டிர தலைமைச் செயலர் நிதின் கரீர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, முதல் பெண் தலைமைச் செயலாளராக சுஜாதா சவுனிக் பொறுப்பேற்றார்.
மந்த்ராலயாவில் (தலைமைச் செயலகத்தில்) நடைபெற்ற விழாவில், 1987ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஓய்வுபெற உள்ள சுஜாதாவிடம் நிதின் கரீர் தனது பொறுப்பை ஒப்படைத்தார்.
சுஜாதா சவுனிக் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார். இவரது கணவர் மனோஜ் சாவ்னிக் மாநில தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சுஜாதா, சுகாதாரம், நிதி, கல்வி, பேரிடர் மேலாண்மை, அமைதியைக் கட்டியெழுப்புதல் ஆகிய துறைகளில் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.