புதுடெல்லி: ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட பிற மின்னணு தளங்கள் மூலம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் சம்மன் அனுப்பக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், தேவையற்ற கைதுகளை தடுத்து, ஜாமீனை எளிதாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிண்டல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு உதவ அமிகஸ் கியூரியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா கூறுகையில், வாட்ஸ்அப் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத சேவை தளங்கள் மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்புகின்றனர்.
இது பாதுகாப்பானது அல்ல என்பதால் உச்சநீதிமன்றம் இதை பரிசீலிக்க வேண்டும். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வாட்ஸ்அப் போன்ற அங்கீகரிக்கப்படாத சேவை தளங்கள் உள்ளிட்ட பிற மின்னணு தளங்களில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அல்லது நோட்டீஸ் அனுப்பக்கூடாது. இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் காவல்துறைக்கு பொது சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.