வயநாடு: எனது சகோதரி பிரியங்காவை சகோதரியாகவும், தாயாகவும், மகளாகவும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வயநாடு தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் பிரியங்கா. நவ்யா ஹரிதாஸ் மற்றும் இடதுசாரி வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வயநாடு மானந்தாவாடியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்காவை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்தார்.
இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், கட்சியின் மாநிலக்குழு தலைவர் சுதாகரன், எம்.பி., சுரேஷ், சித்திக் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராகுல் கூறியதாவது: பிரியங்கா எனக்கு சகோதரியாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம். அதேபோல், உங்களுக்கு ஒரு சகோதரி இருப்பது அதிர்ஷ்டம். பிரியங்காவை எம்.பி.யாக தேர்வு செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பிரியங்கா கூறுகையில், எனது சகோதரர் ராகுல் உண்மையான உரிமைப் போராளி என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே நீங்கள் அவரை ஆதரித்து போராட ஊக்குவித்தீர்கள். அவர் என்ன ஆதரவை கொடுத்தாரோ அதே ஆதரவை எனக்கும் தர வேண்டும் என்றார்.