புதுடில்லி : “”30 லட்சம் பேர் மட்டுமே உள்ள திருப்பதிக்கு எப்படி மாநில அந்தஸ்து வழங்க முடியும்?” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் உள்ள விலங்குகளின் கொழுப்பு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சுட்டிக்காட்டியதையடுத்து இந்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து, சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதில், லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசு, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் நவம்பர் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ””கோவிலுக்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிட முடியுமா? 30 லட்சம் மக்கள் வசிக்கும் திருப்பதிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது எப்படி?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதன் பின்னர், அந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து, மனு கொடுத்தவருக்கு உத்தரவிடவில்லை.