புதுடெல்லி: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், ஊழியர்கள், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை கட்ட உத்தரவிடக் கோரி, அசாம் பார் கவுன்சிலை சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் கலிதா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதித்துறை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாய வளாகங்களில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் கட்டப்படும். அனைத்து மாநில அரசுகளும் கழிப்பறைகள் கட்ட நிதி ஒதுக்க வேண்டும். நீதித்துறை இவ்வாறு தீர்ப்பளித்தது.