மும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு வேதனை அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்பி சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் சமீபத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் தொழிலதிபர்களை மிரட்டி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய பெங்களூரு திகார் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.
தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி., சுப்ரியா சுலே, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் நல்ல பெண். மிகவும் தைரியமான மற்றும் மிகவும் நேர்மையான. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல என நம்புகிறேன். நவம்பர் மாதம் பார்லிமென்ட் கூடும் போது, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கேள்வி கேட்போம். இவ்வாறு சுப்ரியா சுலே கூறியுள்ளார்.