புதுடெல்லி: இந்தியாவிற்கு வருகை தந்துள்ள உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் தந்தை அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்தியா வந்துள்ள டெஸ்லா நிறுவனர், உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் தந்தை, எர்ரால் மஸ்க் அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்தார்.
ராமர் கோயிலுக்கு சென்ற அவர் மனமுருகி வழிபட்டார். தொடர்ந்து கோயிலில் இருக்கும் அனுமன் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் மலர்மாலையும், தீர்த்த பிரசாதங்களும் அவருக்கு வழங்கப்பட்டன.