புதுடெல்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.4.27 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் உலகின் முதல் 10 ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர். இதன் சந்தை மதிப்பு ஜூலை 31 அன்று ரூ.4.27 லட்சம் கோடியாக (51 பில்லியன் டாலர்) அதிகரித்தது.
இதன் மூலம், நாட்டின் அதிக சந்தை மதிப்புள்ள வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்தது. டாடா மோட்டார்ஸ் பங்கு விலை இந்த ஆண்டு 50 சதவீதமும், 2023ல் 101 சதவீதமும் உயர்ந்துள்ளதால் இது சாத்தியம். இது தவிர உலகின் டாப் 10 ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் இடம்பிடித்துள்ளது.
டெஸ்லா $711 பில்லியன் மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டொயோட்டா ($307 பில்லியன்), BYD நிறுவனம் ($92 பில்லியன்), ஃபெராரி NV ($74 பில்லியன்) மற்றும் Mercedes-Benz Group ($71 பில்லியன்) ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
ஸ்டெல்லாண்டிஸ் என்வி, ஜெனரல் மோட்டார்ஸ், மாருதி சுஸுகி இந்தியா, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, ஃபோர்டு மோட்டார், ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா கார்ப்பரேஷன் போன்ற முன்னணி நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் பின்னுக்குத் தள்ளியுள்ளது.