பாட்னா: 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இந்த சூழலில், ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தலைநகர் பாட்னாவில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை கிடைக்காத அனைத்து குடும்பங்களுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம்.

எங்கள் அரசு பதவியேற்ற 20 நாட்களுக்குள் இது தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றுவோம். அடுத்த 20 மாதங்களில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.