என்னை விமர்சித்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறிக்கி கிராமத்தில் உள்ள காலபைரவர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, குறிப்பாக வட மாநிலங்களில் தனி நபர்களை தாக்குவது பாஜகவினரின் வாடிக்கை.
தமிழகத்தில் தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கியுள்ளதாகவும், தனிநபர்களை மட்டும் தாக்காமல், மக்களையும் தாக்குவார்கள் என்றும் செல்வப்பெருந்தகை கூறினார். அண்ணாமலை மீதான விமர்சனத்தால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது என்றார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சி மேலும் பலம் பெற வேண்டும் என்பதற்காக என்னை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து தாக்கி வருகிறார்.
தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து காந்திய வழியில் போராட தமிழக காங்கிரஸ் தயாராக உள்ளது என்றார் செல்வப்பெருந்தகை.