புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மத்திய கிழக்கில் போர் நடந்து வருவதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உள்ளது.
போரின் காரணமாக பல நாடுகளிலும் எரிபொருள் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்புகளை உணர்வதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. நேற்றும் இதுகுறித்த அறிவிப்புகளை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டது.
இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பும், 74 நாட்களுக்கான கச்சா எண்ணெய் கையிருப்பும் உள்ளது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.க்கு எங்கும், எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்று தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு தலா 10 ரூபாய் குறைத்துள்ளது. பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.13-ல் இருந்து ரூ.3 ஆக குறைத்தது. டீசலுக்கான கலால் வரி ரூ.10-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.