டெல்லி: “நாட்டு மக்களின் வியர்வையால் இந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது. ஆனால், அவர்கள் சிந்திய வியர்வையால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. மாறாக, மோடியின் தொழிலதிபர்கள் மட்டுமே முழு பலனைப் பெறுகிறார்கள். மோடி ஆட்சியில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் உற்பத்தித் துறை வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் தலைவிரித்தாடுகின்றன. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயம், விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்க்கையின் விளிம்புக்கே சென்றுவிட்டனர். பணிக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால் பலர் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கடும் ஜிஎஸ்டி, வரி, வருமான வரி போன்ற சுமைகளால் மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.மோடி ஆட்சியில் நாட்டில் ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. ஏழைகளுக்கு வங்கிகள் கொடுக்கும் சிறு கடனைக் கூட மத்திய அரசு ஈவு இரக்கமின்றி பறித்து வருகிறது. ஆனால் மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்கிறது.
விலைவாசி உயர்வால் அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மோடியின் வளர்ந்த இந்தியாவில், அவரது கடின உழைப்பால் யார் பலன் அடைந்தார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்,” என்றார்.