புது டெல்லி: ஒவ்வொரு வீட்டின் நிலை உட்பட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் பதிவாளர் ஜெனரலுமான மிருத்யுஞ்சய் குமார் நாராயண் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் வீட்டின் நிலை, சொத்துக்கள் மற்றும் வசதிகள் குறித்த தகவல்களை சேகரிக்கும்.

பிப்ரவரி 1, 2027 முதல் திட்டமிடப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரின் சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்களை சேகரிக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி அடிப்படையில் நடத்தப்படும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.