சண்டிகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் நேற்று அட்டாரி-வாகா எல்லையில் கதவுகள் திறக்கப்படாமலேயே கொடியிறக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டரி பகுதி அமைந்துள்ளது. அதே போல் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டரி-வாகா எல்லையில் இருநாட்டு ‘பின்வாங்கு முரசறை’ (Beating the Retreat) என்று அழைக்கப்படும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இதில் இந்தியாவின் பக்கத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தானின் பக்கத்தில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த ரேஞ்சர்ஸ்களும் பங்கேற்பார்கள். இதனை இருபுறங்களிலும் இருந்து இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் உற்சாகமாக கண்டுகளிப்பார்கள்.
இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் நேற்று அட்டாரி-வாகா எல்லையில் கதவுகள் திறக்கப்படாமலேயே கொடியிறக்க நிகழ்வு நடைபெற்றது.