வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆய்வகத்தில் இதயம், கல்லீரல் மற்றும் இரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை செயற்கையாக வளர்ப்பதன் மூலம் ஒரு சாதனையை படைத்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வு அறிக்கை முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வு கூறியதாவது:- 2017 முதல் ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

அதன்படி, 16 நாட்களில் எங்கள் ஆய்வகத்தில் ஒரு செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை இதயம் மனித இதயத்தைப் போல துடிக்கிறது. இதேபோல், நாங்கள் ஒரு செயற்கை கல்லீரலையும் உருவாக்கியுள்ளோம்.
செயற்கை இரத்த நாளங்களையும் உருவாக்கியுள்ளோம். எங்கள் ஆராய்ச்சி மூலம், லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.