புதுடில்லி: இது மதிப்புமிக்கதல்ல என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.இது எதற்காக தெரியுங்களா?
சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ள கருத்தில், ‘அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 205 பேர் டெக்சாஸில் இருந்து விமானம் மூலம் இன்று (பிப்.04) திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்கள் அபாயங்களை கடந்து அமெரிக்காவில் குடியேற முயற்சி எடுப்பது மதிப்புமிக்கதல்ல’ என தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் கண்ணியத்தை குறைக்கும் செயலாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்தும் தெரிவித்துள்ளனர்.