புதுடெல்லி: ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் 2025-26 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும் என்று எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மனித மூலதன மேம்பாடு மற்றும் விவேகமான நிதி மேலாண்மைக்கு ஆதரவளிக்க நன்கு அளவீடு செய்யப்பட்ட நிதி உத்திகள் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்தும்.

ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்கும் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. விக்சித் பாரத் இலக்கை நோக்கிய பயணத்திற்கு நிதிக் கொள்கையின் மறுசீரமைப்பு அவசியம் என்றும் EY கூறியது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட மறுமதிப்பீட்டுத் தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2023, 24 மற்றும் 25 ஆகிய நிதியாண்டுகளில் முறையே 7.6 சதவீதம், 9.2 சதவீதம் மற்றும் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.