மகாராஷ்டிரா: இந்தியாவின் உயரமான குடும்பம் என்ற பெருமையை மகாராஷ்டிராவை சேர்ந்த குல்கர்னி குடும்பம் பெற்றுள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒன்றிரண்டு பேர் உயரமாக இருப்பது சகஜம்தான். ஆனால், குடும்பத்தில் எல்லோருமே உயரமாக இருப்பது அரிது. மகாராஷ்டிராவை சேர்ந்த குல்கர்னி குடும்பம் அதிலொன்று.
இந்த குடும்பத்தினர் நால்வரின் உயரத்தை கூட்டினால் 26 அடி வருகிறது. தந்தை 6.8 அடி, தாய் 6.2 அடி, மகள்கள் 6.6 அடி & 6.4 அடி உயரம் உள்ளனர். லிம்கா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில், இந்தியாவின் உயரமான குடும்பமாக இவர்கள் இடம்பிடித்துள்ளனர்.