புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இளைஞர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:- நமது நாட்டு இளைஞர்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தயாராக உள்ளனர். ஆராய்ச்சித் துறையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும், அவர்கள் ஆராய்ச்சியில் புதிய உயரங்களையும் மைல்கற்களையும் எட்டுகிறார்கள்.
நாட்டின் இன்றைய இளைஞர்கள் திருப்புமுனையான கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா சமீபத்தில் உயர்கல்வி தரவரிசையில் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இளைஞர்களும் உயர்கல்வியில் சாதிக்க முடியும் என்பதை நம் நாட்டு இளைஞர்கள் நிரூபித்துள்ளனர். நமது நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் கல்வி மையங்களைத் திறக்கத் தொடங்கியுள்ளன.

இது கல்வி பரிமாற்றத்தை மேம்படுத்தும். செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்காக இந்தியா AI திட்டத்தை கையிலெடுத்துள்ளது. AI மேம்பாட்டிற்கான உயர்தர தரவு மற்றும் ஆராய்ச்சி வசதிகளுடன் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. சிறந்த எதிர்கால தொழில்நுட்பங்களின் பட்டியலில் இந்தியாவை சேர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் ஐஐடி கான்பூர் மற்றும் பாம்பேயில் AI, நுண்ணறிவு அமைப்புகள் போன்றவற்றுக்கான சூப்பர் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும். நம் முன் உள்ள இலக்குகள் மிகப் பெரியவை. தயாரிப்புகள் ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்ட பிறகு சந்தைக்கு வர நீண்ட காலம் எடுக்கும். ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கான நேரத்தை குறைத்தால், பொருட்கள் விரைவில் மக்களை சென்றடையும். இதுவும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும். அவர் கூறினார்.