கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒரு எலியால் கடிக்கப் பட்டது. இந்த சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடிமாலி அருகே கம்பளிகண்டத்தைச் சேர்ந்த 45 வயதான ஆட்டோ டிரைவர் ஷாஜன் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு கால் அறுவை சிகிச்சை கிடைத்த பிறகு, ஏப்ரல் 28 ஆம் தேதி அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு, அவர் மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன் தினம் இரவு, அவரது இரண்டு கால் பெருவிரல்களை எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால், பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த வார்டில் இருந்த மற்ற நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வார்ட்டில் உள்ள ஜன்னல்கள் உடைந்துள்ளதால், அதன் வழியாக எலி வரிசெய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், சுகாதாரத்துறை ஊழியர்கள் இந்த சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.