புது டெல்லி: மே மாதத்தில் 58.8 ஆக இருந்த HSBC இந்தியா சேவைகள் PMI வணிக செயல்பாட்டு குறியீடு ஜூன் மாதத்தில் 60.4 ஆக உயர்ந்துள்ளது. புதிய வணிக ஆர்டர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் பின்னணியில் இந்த குறியீடு உயர்ந்துள்ளது. கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI) 50-க்கு மேல் இருப்பது விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
அதே நேரத்தில் 50-க்குக் கீழே இருப்பது சுருக்கத்தைக் குறிக்கிறது. HSBC தலைமை பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறுகையில், “புதிய உள்நாட்டு ஆர்டர்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. ஒப்பீட்டளவில், உள்ளீட்டு செலவுகள் இப்போது குறைவாக உள்ளன, இது நிறுவனங்கள் தங்கள் லாப வரம்புகளை மேம்படுத்த உதவுகிறது.

இது ஜூன் மாதத்தில் சேவைத் துறை அதன் 10 மாதங்களில் மிக வேகமாக வளர வழிவகுத்தது. வேலைவாய்ப்பும் தொடர்ந்து 37-வது மாதமாக உயர்ந்துள்ளது. இந்த காரணிகள் சேவைத் துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.