டெல்லியில் 29 வயது இளம்பெண் ஒருவர் 27 லட்சம் ரூபாய் செலவில் புதிய மஹிந்திரா தார் எஸ்யுவி வாங்கினார். காரை முதன்முதலாக ஸ்டார்ட் செய்வதற்காக பாரம்பரியமாக எலுமிச்சம்பழத்தை டயர் அடியில் வைத்து சடங்கு செய்ய முயன்றார்.
ஆனால், மெதுவாக ஆக்ஸிலேட்டரை அழுத்த வேண்டிய இடத்தில் திடீரென வேகமாக அழுத்தியதால் விபரீதம் நேர்ந்தது. ஷோரூமின் முதல் தளத்தில் இருந்த கார் கண்ணாடியை உடைத்து நேராக சாலையில் கவிழ்ந்தது.
கார் தலைகீழாக கவிழ்ந்து விழுந்ததில், வாகனத்தின் கண்ணாடிகள் சிதறியதோடு, வாகனமும் கடுமையாக சேதமடைந்தது. அதேசமயம், அந்த இளம்பெண்ணும், ஷோரூம் ஊழியர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சடங்கிற்காக செய்யப்பட்டது ஒரு கணத்தில் விபத்தாக மாறியதால், அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்துக்குப் பிறகு ஷோரூமிலும், உள்ளூரிலும் பரபரப்பு ஏற்பட்டது.