கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஓய்வு பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியர் சங்கத்தின் 10-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். ஒரு சமூகமும், நாடும், குடும்பமும் முன்னேற வேண்டுமானால், ஆணும் பெண்ணும் சமத்துவமும் சம உரிமையும் வேண்டும்.
இஸ்ரோவில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளும் முன்னுரிமையும் வழங்கப்படுகின்றன. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குனர் நிகர் சாஜ் என்ற பெண்மணி. மேலும் வனிதா சந்திரயான் 2 இன் இயக்குநராக பணியாற்றினார். சந்திரயான் 3 திட்டத்தில் இருந்தவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள். இவ்வாறு அவர் கூறினார்.

2028-ல் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ரோகினி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘சந்திரயான் 4 நிலவில் தரையிறங்கி அங்கிருந்து மண் மாதிரிகளை எடுத்து பூமிக்கு கொண்டு வரும் திட்டம். அதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. 2028-ல் ஏவப்படும்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அதிகளவு மீன்கள் எங்கு கிடைக்கும் என்பதை அறிய விண்வெளியில் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.