புதுடெல்லி: நாடு முழுவதும் காணாமல் போன சிறுவர்களில் 36,000 மற்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறார்கள் மாயமானது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, SCல் தொடரப்பட்ட வழக்கு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில், ‘2020 முதல் 3 லட்சம் குழந்தைகள் காணாமல் போனார்கள்.
அதில் 36,000 பேரை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாயமான சிறார்களை 4 மாதங்களில் கண்டுபிடிக்க முடியவில்லையெனில் கடத்தல் தடுப்பு பிரிவிடம் விசாரணையை ஒப்படைக்க மாநிலங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டது.
இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.