புதுடில்லி: லண்டனை சேர்ந்த, ‘டைம்ஸ் உயர் கல்வி தரவரிசை’, உலகின் சிறந்த பல்கலைகழகங்களை பட்டியலிட்டு உள்ளது. நிறுவனத்தின் தலைமை சர்வதேச விவகார அதிகாரி பில் பாட்டி கூறுகையில், “டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில் இடம்பெற்றுள்ள இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நரேந்திர மோடி மேற்கொண்ட உலகளாவிய சீர்திருத்தங்களே இதற்குக் காரணம்.
2017 ஆம் ஆண்டில், டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில் 42 இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. தற்போது, 133 இந்திய பல்கலைக்கழகங்கள் 2025 தரவரிசை பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளன. உலக அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பெற்றுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உலக அரங்கில் அதிக அளவில் இந்திய பல்கலைக்கழகங்கள் காலடி எடுத்து வைப்பது பெருமைக்குரியது. தரமான கல்வியை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம், மேலும் அவை வளரவும் புதுமைப்படுத்தவும் தேவையான வாய்ப்பை வழங்குவோம். இது நமது இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.