திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்த விஸ்வநாத் குடும்பத்தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து நடராஜ் நரேந்திர குமார் மற்றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ. 90,000 பெற்றனர்.
அதன் பிறகு, பணம் கேட்டு எந்த காரணத்தையும் கூறி அவர்களை ஏமாற்றினர். இது தொடர்பாக விஸ்வநாத் குடும்ப உறுப்பினர்கள் திருமலை விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், பணத்தைப் பெற்ற இருவரும் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

இருவரும் 15-க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இருவர் மீதும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பக்தர்கள் போலி தேவஸ்தான இணையதளங்களில் முன்பதிவு செய்யக்கூடாது.
தரிசனம் அல்லது அவர்களின் அறைகளுக்கு இடைத்தரகர்களை நம்பக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.