திருமலை: திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசனம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான தேதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்.18 காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு ஏலச்சீட்டு மூலம் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.
மே மாதம் நடைபெறும் திருகல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ர தீப அலக்னார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க, 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படுகிறது. 22-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கபிரதட்சண டோக்கன்களும், காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டும், மாலை 3 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
சிறப்பு தரிசன டிக்கெட் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ. 300 கிடைக்கும். திருமலையில் உள்ள அறைகளுக்கான முன்பதிவு மாலை 3 மணிக்கு கிடைக்கும்.