பெங்களூரு: இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் இன்று ராணுவ வீரர்களின் சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெங்களூரு கப்பன் சாலையில் உள்ள மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் ராணுவ வீரர்களின் பல்வேறு சாகசங்கள் நடைபெறுகின்றன. இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியதாவது:- இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு சாகசங்கள் நடைபெறுகின்றன. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், குதிரைப்படை வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து கீழே குதிப்பவர்களின் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் சாகச மற்றும் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சேர உதவி மையம் மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இதில் பங்கேற்று ராணுவத்தின் மகிமை, வீரர்களின் சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை ரசித்து, ராணுவ ஆட்சேர்ப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.