உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மௌனி அமாவாசையையொட்டி, கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் குவிந்தனர். அன்று அதிகாலையில் சுமார் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் புனித நீராடுவதற்காக திரிவேணி சங்கமத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 30 பேர் உயிரிழந்தனர், 60 பேர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், “பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பக்தர்கள் உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். கலாசாரத்தை விஜய் கட்டுப்படுத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.