புது டெல்லி: டிஜிபி அனுராக் குப்தாவின் பதவி நீட்டிப்புக்கான ஜார்க்கண்ட் அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கிடையில், ஜார்க்கண்ட் அரசு அனுராக் குப்தாவை தற்காலிக டிஜிபியாக நியமித்ததற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர் மாநிலத்தின் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவராக இருக்க வேண்டும். அவரது பதவிக்காலம் 6 மாதங்கள் நிலுவையில் இருக்க வேண்டும்.

டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் 2 ஆண்டுகள் பதவியில் இருந்திருக்க வேண்டும் போன்ற விதிகளை பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்தது.
இது மீறப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரித்து வருகிறார்.