ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆரம்ப கட்டத்தில் காங்கிரஸ்-நேஷனல் கான்பரன்ஸ் கட்சி கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தரவுகளின்படி, பாஜக 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், சுயேட்சைகள் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன.
காங்கிரஸ்-நேஷனல் கான்பரன்ஸ் கட்சி கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து மொத்தம் 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் முக்கியப் போட்டியாக உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, காங்கிரஸ்-நேஷனல் கான்பரன்ஸ் கூட்டணி 43 இடங்களையும், பெரும்பான்மைக்கு குறைவாகவும், பாஜக 27 இடங்களையும், மக்கள் ஜனநாயகக் கட்சி 7 இடங்களையும், மற்றவை 13 இடங்களையும் கைப்பற்றும்.