தெலுங்கானாவில், கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலை 65ல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சூர்யாபேட்டை, கம்மம் பகுதிகளில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கம்மம் செல்லும் வழியில் நாயக்கன்கூடம் என்ற இடத்தில் பாலேறு ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் சாலை நீரில் மூழ்கியுள்ளது. மேலும், சூர்யாபேட்டை மாவட்டம், கோடாட் நகர் அருகே ராமாபுரம் எக்ஸ் ரோட்டில் பாலம் இடிந்து விழுந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர காலங்களில், பயணிகள் குறிப்பிட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஹைதராபாத் முதல் விஜயவாடா வரை:
ஹைதராபாத்-சவுடுபால்-சித்யால்-நார்கெட்பல்லி-நல்கொண்டா-மிரியல்குடா-பிடுகுரல்லா-குண்டூர்-விஜயவாடா.
ஹைதராபாத் முதல் கம்மம் வரை:
ஹைதராபாத்-சவுடுபால்-சித்யால்-நாக்ரேகல்-அர்வபள்ளி-தூதகத்ருதி-மத்திராலா-மரிபெட்டா பங்களா-கம்மம்.
போக்குவரத்துக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவசர காலங்களில், ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறையின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.