சென்னை: பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், பிளம்பர், டீசல் மெக்கானிக், பெயிண்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் அப்ரண்டிஸ் பணி வாய்ப்புகளை தெற்கு ரயில்வே வழங்குகிறது. 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள்; மொத்தம் 2,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 12 ஆகும்.
தெற்கு ரயில்வே உள்ளிட்ட சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு கோட்டம், பெரம்பூர், அரக்கோணம் பணிமனைகளில் 2,438 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி என்ன?
இந்தப் பயிற்சிப் பணியிடங்களுக்கு ஐடிஐயுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சியும், எம்எல்டி பணிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம்.
வயது
விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://sr.indianrailways.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அந்தந்த மண்டலங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 12. இன்னும் 12 நாட்கள் உள்ளன.
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 100. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.