புது டெல்லி: மக்களவை உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:- குடிமக்கள் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் அல்லது முன்பதிவு கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம்.
இருப்பினும், ஆன்லைனில் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை உறுதிப்படுத்திய ஆர்ஏசி பயணிகள் மட்டுமே காப்பீட்டுப் பலனைப் பெறுவார்கள். காப்பீட்டுப் பலனைப் பெற விரும்பும் எந்தவொரு பயணியும் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்தத் திட்டத்தை (விருப்பப் பயணக் காப்பீட்டுத் திட்டம் – OTIS) தேர்வு செய்யலாம்.

தற்போது, ஒரு பயணி அனைத்து வரிகளையும் சேர்த்து ஒரு பயணத்திற்கு 45 பைசா மட்டுமே பிரீமியத்தை செலுத்த வேண்டும்.
பின்னர், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பாலிசி விவரங்கள் நேரடியாக பயணிகளின் மொபைல் அல்லது மின்னஞ்சல் ஐடிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.