பெங்களூரு: மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி நேற்று அளித்த பேட்டி: மத்திய அரசுடன் கர்நாடக காங்கிரஸ் தேவையில்லாமல் மோதுகிறது. பிரதமர் மோடியுடன், முதல்வர் சித்தராமையா போராடி வருகிறார். பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கு தேவையானதை பெற மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
கர்நாடகாவில் உள்ள சித்தராமையா அரசு மத்திய அரசை உள்நோக்கத்துடன் விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய அரசுடன் சுமூகமாக நடந்தால், மாநிலத்துக்கு சாதகமாக இருக்கும். ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், உட்கார்ந்து பேசினால் சரி செய்யலாம்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசை குற்றம் சாட்டுகின்றனர். இது மாநிலத்துக்கு பின்னடைவு ஏற்படுமே தவிர, காங்கிரசுக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே பிரதமரின் நோக்கம். அவர் என்னை நம்பி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான துறையை என்னிடம் ஒப்படைத்தார். எனது துறையை சரியாக புரிந்து கொள்ள, குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும்.
அவர் கூறியது இதுதான்.