புதுடில்லி: அன்ரிசர்வ்டு பெட்டிகள் குறைக்கப்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்பட வில்லை என ரயில்வே விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் 26 ரயில்களில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4இல் இருந்து 2-ஆக குறைக்கப்பட இருப்பதாகவும், அதற்கு பதிலாக கூடுதல் ஏ.சி பெட்டிகள் இணைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அது தவறான செய்தி என ரயில்வே மறுத்துள்ளது.