டெல்லி: நாடு முழுவதும் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் வங்கிகள் அல்லது ஏடிஎம்களில் பணம் எடுக்கச் சென்று காத்திருக்க வேண்டிய நிலை மாறி, தற்போது போன் மூலம் பணம் செலுத்தும் வசதியை யுபிஐ சேவை வழங்கியுள்ளது.

இதன் காரணமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ ஆப்ஸ் மூலம் பெரும்பாலானோர் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். மேலும், பெட்டிக் கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்திலும் க்யூஆர் குறியீடு இருப்பதால், மக்கள் கையில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
இருப்பினும், சில நேரங்களில் UPI சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பயனர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் UPI பணப்பரிமாற்ற சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், GPay, Phone Pay, PayTM உள்ளிட்ட UPI சேவைகளின் பாதிப்பால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது.