வாஷிங்டன்: கனடா மற்றும் அமெரிக்காவின் பல முக்கிய விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகள் மர்ம ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராகவும் செய்திகள் வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீண்ட காலமாக நடந்த போர் சமீபத்தில் நிறுத்தப்பட்டு, அந்த அமைதி உடன்பாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய பங்கை வகித்தார். ஹமாஸ் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல சர்வதேச விமான நிலையங்களின் மின்பலகைகள் ஹேக் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் பென்சில்வேனியாவின் ஹாரிஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்திலும், கனடாவின் விக்டோரியா, வின்ட்சர் மற்றும் கெலோனா விமான நிலையங்களிலும் நடைபெற்றது. சில நிமிடங்களுக்குள் ஹமாஸ் ஆதரவு செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. இதையடுத்து சைபர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கட்டுப்பாட்டை மீட்டனர்.
இந்நிலையில், இந்த ஹேக்கிங் சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க சைபர் பாதுகாப்பு துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், ஹமாஸ் ஆதரவு வலைத்தளங்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.