இந்திய ரயில்வே, நாட்டின் அதிவேக ரயில்களாக அறியப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
பாட்னா – கோம்தி நகர் வந்தே பாரத் ரயில் மார்ச் 12, 2024 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இது 545 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி 25 நிமிடங்களில் கடக்கிறது.
இந்த ரயில் ஏசி சேர் கார் மற்றும் எக்ஸிகியூடிவ் சேர் கார் வசதிகளுடன் கொண்டுள்ளது. இப்பொழுது அயோத்தி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
ஜனவரி 7, 2025 முதல், இந்த ரயில் வாரணாசி – சுல்தான்பூர் – லக்னோ வழித்தடத்தில் இயக்கப்படும். ரயில் பயணிகள் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு தங்களது பயண திட்டங்களை முன்னிலைப்படுத்துமாறு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.