புது டெல்லி: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றுகையில், “இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது, உலகம் முழுவதும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.
இந்தியாவின் வளர்ச்சி சில நாடுகளை பொறாமைப்பட வைத்துள்ளது. அவர்களால் நமது வளர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் அஜீரணத்தால் அவதிப்படுகிறார்கள்.

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 4-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு முன்னேறி வருகிறது.
விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன், நமது நாடு நிச்சயமாக மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.