இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளால் அமெரிக்கா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரிய ஒளி மின் திட்டங்களை வெல்வதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்காவில் முதலீடுகளை உயர்த்தியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவன தகவல்படி, இந்தியாவின் சுதந்திர கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்க அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியா, ஆசியா, ஆப்ரிக்கா என பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வரும் அதானிக்கு எதிரான நடவடிக்கை, இந்தியாவை தன் வழிக்கு கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்கா கருதுகிறது.
அதானி, அமெரிக்காவிலும் உலகிலும் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. இந்திய அரசின் மிக முக்கியமான தொழிலதிபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, இந்தியாவின் பொருளாதார நிலையையும், அதை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய நிறுவனங்களையும் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது என்று ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்கும் அதானிக்கும் இடையிலான அரசியல் சர்ச்சையும் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு அதானி அளித்த ஆதரவை, அமெரிக்க ஆளும் கட்சியினர் எச்சரிக்கையுடன் பார்க்கின்றனர்.
சர்வதேச அளவில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கவும், பெரிய இந்திய நிறுவனங்களை ஆபத்தில் ஆழ்த்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.