டெல்லி : மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பதில் அளிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி, மே 10 முதல் ஜூன் 1 வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதன்பின், லோக்சபா தேர்தலுக்கு, ஆம் ஆத்மியின் இந்திய கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்த கெஜ்ரிவால், ஜூன், 2ம் தேதி சிறைக்கு திரும்பினார்.இந்நிலையில், ஜாமின் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 21ம் தேதி விசாரித்த நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது.
ஆனால் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே, சிபிஐ அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து கெஜ்ரிவாலை திகார் சிறையில் ஜூன் 26ஆம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், சி.பி.ஐ. இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் நேரடியாக தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவாலின் மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சால், சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.