டெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு நவம்பர் 11 முதல் பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம். பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல்களுக்கு நவம்பர் 11 முதல் பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டசபையின் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதியின் அடிப்படையில் இது செய்யப்படும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 10, 2026 அன்று முடிவடைவதால், இந்த ஆண்டு நவம்பர் 11 முதல் பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுச் சின்னத்திற்கு மே 23 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.