புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் ஆட்சியில் இருந்தபோது ஆடம்பரமாக புதுப்பிக்கப்பட்ட அரசு வீட்டில் பாஜக முதல்வர் தங்கமாட்டார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக தலைவர் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சி மீது பா.ஜ., பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியது. குறிப்பாக, முதல்வர் வசிக்கும் அரசு வீட்டை ஆடம்பர மாளிகையாக மாற்றியுள்ளார் கெஜ்ரிவால் ரூ. 75 முதல் ரூ. 80 கோடி செலவில் கட்டடம் சீரமைக்கப்பட்டது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது. பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் புதிய முதல்வரை பாஜக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக முதல்வர் ஆடம்பர மாளிகையில் தங்கமாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக சக்சேனா.