மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் தனியாக வாக்கிங் சென்றுள்ளார். இதனால் அந்த பெண்ணின் 31 வயது கணவர் கோபமடைந்துள்ளார்.

மாமனாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த கணவர், முத்தலாக் மூலம் திருமணத்தை ரத்து செய்வதாக கூறினார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்ய கடந்த 2019-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பெண்ணின் கணவர் மீது முஸ்லீம் பெண்களின் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் மிரட்டல் குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.