பெங்களூரு: பா.ஜ.,வில் இருந்து யோகேஷ்வர் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள 4 மேல்சபை இடங்கள் உட்பட, ஆளும் காங்கிரசில் கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்க கூட்டணி கட்சிகளும், ஆளும் காங்கிரசும் தயாராகி வருகின்றன.
இந்த தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், நான்கு மேல்சபை இடங்களுக்கான தேர்தலுக்கு தயாராக வேண்டும். மேல்சபையில் அரசு சார்பில் வெவ்வேறு கோட்டா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட காங்கிரசை சேர்ந்த பிரகாஷ் ரத்தோட் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடைகிறது. திப்பேசாமியின் ம.ஜ.த.வின் பதவிக்காலம் 2025 ஜனவரியில் முடிவடைகிறது. இந்த மூன்று இடங்களும் காங்கிரசுக்குக் கிடைக்கும்.
பாஜக சார்பில் மேல்-சபைக்கு நியமிக்கப்பட்ட யோகேஸ்வருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஆனால் அவர் ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார். அவரால் காலியாகும் தொகுதியையும் சேர்த்து 4 மேலவை இடங்கள் காங்கிரசுக்கு கிடைக்கும். இந்த இருக்கைகளுக்காக சுதர்சன், வினய் கார்த்திக், ராணி சதீஷ், எஸ்.ஆர்.பாட்டீல் உட்பட 50க்கும் மேற்பட்டோர் வரிசையில் நிற்கின்றனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக முதல்வர் சித்தராமையாவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்து, தற்போது முதல்வரின் சிறப்பு அதிகாரியாக இருக்கும் வெங்கடேஷ், மேல்சபை இருக்கை மீதும் கண் வைத்துள்ளார். முதலமைச்சரிடம் பல ஆண்டுகள் பணியாற்றி, அரசில் உயர் பதவிகளை வகித்தவர்கள் ஏராளம். முன்னதாக, பல ஆண்டுகளாக தன்னுடன் இருந்த திப்பேசுவாமிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா பதவி கொடுத்தார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனக்கு நெருக்கமான சித்தலிங்கசுவாமிக்கு பாஜக சீட் கொடுத்து வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட வைத்தார். அதேபோல், சித்தராமையாவுக்கு நெருக்கமான வெங்கடேஷுக்கு மேல்சபை சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குள், காங்கிரசுக்கு போதும், போதும் என்றானது அடுத்ததாக மேல்சபைக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான்கு இடங்களுக்கு 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.