இந்தியாவில் தற்போது பழைய (Secondhand) கார்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. புதிய கார் வாங்கும் முன்பு பழைய கார் வாங்கி ஓட்டுவதன் மூலம் அனுபவம் பெறலாம் என்று பலரும் கருதுகிறார்கள். இந்த நிலையை கருத்தில் கொண்டு, பல்வேறு வங்கிகளும் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்க கடன் வழங்கி வருகின்றன.
பழைய கார் வாங்க கடன் பெறுவதற்கான தகுதிகள்:
- விண்ணப்பதாரர் 21 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்
- நிச்சயமான வருமான ஆதாரம் இருக்க வேண்டும்
- கிரெடிட் ஸ்கோர் 675 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்
- தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சுயதொழில் புரிவோர் அனைவரும் இந்த கடனை பெறலாம்
இந்த கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டிய முறை:
- எந்தெந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இந்த கடனை வழங்குகின்றன என்பதை பற்றிய தகவலை சேகரிக்க வேண்டும்
- ஒவ்வொரு நிறுவனமும் வழங்கும் வட்டி விகிதம், திருப்பிச் செலுத்தும் கால அவகாசம், மற்ற நிபந்தனைகள் ஆகியவற்றை ஒப்பீடு செய்ய வேண்டும்
- உங்களுக்கு தேவையான அனைத்து நிபந்தனைகளும் சரியாக இருக்கும் வங்கியை தேர்வு செய்ய வேண்டும்
- பாஸ்போர்ட், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற அடையாள ஆவணங்கள், வருமான ஆதாரம், இருப்பிட சான்று போன்ற தேவையான ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்
- நேரடியாக வங்கிக்கு சென்று அல்லது இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்
- வங்கி உங்கள் தகவல்களை சரிபார்த்த பின்னர் கடன் பெறுவதற்கான முடிவை அறிவிக்கும்
- கடனை 12 முதல் 84 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தலாம்
இந்த கடனை வழங்கும் முக்கிய வங்கிகள்:
- எஸ்பிஐ வங்கி
- ஹெச்டிஎஃப்சி வங்கி
- ஆக்சிஸ் பேங்க்
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- டாடா கேப்பிட்டல்
- மகேந்திரா பைனான்ஸ்
- பஜாஜ் பைனான்ஸ்
இந்த கடனுக்கு சராசரியாக 9% முதல் வட்டி விகிதம் இருக்கும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வருமான நிலை, கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்து கடனை வழங்குகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் குறைந்த செலவில் கார் வாங்க விரும்பும் மக்கள் இலகுவாகக் கடன் பெற்றுக் கொள்ள முடியும். அதிகரித்து வரும் டிஜிட்டல் வசதிகள் மூலம் இணையத்திலும் விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.