சென்னை: வாழைப்பழத்தின் மகத்துவம் அறிந்திருப்பீர்கள்… ஆனால் வாழைப்பழத்தோலின் மருத்துவம்… தெரிஞ்சுக்குவோமா!
ஏழைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்துள்ள பழம் என்றால் வாழைப்பழத்தை தான் சொல்வார்கள். காரணம் விலை குறைந்தது என்பதால். அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரே பழம் என்றும் சொல்லலாம். இதை ஏழைகள் மட்டுமல்ல… அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிடுகின்றனர். காரணம் இதில் உள்ள வைட்டமின்களால். சரி பழத்தில் இப்படி என்றால்… வாழைப்பழத் தோலில்… இருக்கே… அற்புத மருத்துவ குணங்கள் இருக்கே…
நடந்து செல்லும் போது முள்ளை குத்திக்கொள்கிறீர்கள். அதை எப்படி எடுப்பது. இது எங்களுக்கு தெரியாதா? சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு. ஊக்கு, இல்லாட்டி முள்ளை முள்ளால்தான் எடுப்போம் என்கிறீர்களா? அட அதெல்லாம் வேண்டாம்.
வாழைப் பழத் தோல் இருந்தா போதுங்க… கிண்டல் செய்யலைங்க… உண்மைதான். கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்திடுச்சா… வலி தெறித்து எடுக்கும். இதனால் பாதிக்கப்பட்டு டாக்டர்களிடம் சென்றவர்களும் இருக்காங்க… இனி இதை தெரிஞ்சுக்கிட்டீங்களா போதும். அவஸ்தை இல்லாம அந்த முள்ளை நீங்களே எடுத்துடுவீங்க… எப்படி?
இப்படி! முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலை வைத்து மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் உள்ளே போன அந்த முள் எளிதில் வெளியே வந்துவிடும்.
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இப்படி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பை தடுக்க சிறந்த வழி வாழைப்பழத் தோல் ட்ரீட்மெண்ட்தாங்க…
நம்ம மக்களுக்கு மருக்கள் இருந்தால் பெரிய அவஸ்தை. காரணம் சரும அழகையே பாதிக்குது இல்லியா. வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருந்தால் போதும் நாளடைவில் மருக்கள் காணாமல் போய் உடல் பளபளன்னு இருக்கும்.